முகப்பு
செய்திகள்

38 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியுடன் இணையும் சத்யராஜ்!

நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ் இருவரும் 38 ஆண்டுகளுக்குப் பின் இணைந்து நடிக்க உள்ளனர்.

Updated On : 27 மே, 2024 at 12:44 PM
பகிர்:
Updated On : 27 மே, 2024 at 12:20 PM

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்படத்திற்கான நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு நண்பராக நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

1980-களில் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். குறிப்பாக, ரஜினிக்கு வில்லனாக சத்யராஜ் நடித்து வந்தார். இருவரின் நடிப்பில் வெளியான ‘மிஸ்டர். பாரத்’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

இயக்குநர் ஷங்கரின் சிவாஜி திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடிக்க, முதலில் சத்யராஜிடமே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அப்படத்தை சத்யராஜ் மறுத்தார். காரணம், பல ஆண்டுகளாகவே காவேரி பிரச்னையில் ரஜினியின் நிலைப்பாடு சத்யராஜுக்குப் பிடிக்கவில்லை. பல மேடைகளில் சத்யராஜ், மறைமுகமாக ரஜினியை தாக்கிப் பேசியிருக்கிறார்.

தற்போது, 38 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்க உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.