முகப்பு
செய்திகள்

குட் பேட் அக்லி வெளியீட்டுத் தேதி இதுவா?

குட் பேட் அக்லியின் வெளியீட்டுத் தேதி குறித்து...

Updated On : 19 நவம்பர், 2024 at 11:15 AM
பகிர்:

குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறார். அங்கு, இவருக்கான முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடிக்கிறார்.

தற்போது, அஜித்துடன் அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் படப்பிடிப்பில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தை பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படப்பிடிப்பும் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடையும் எனத் தெரிகிறது. விடாமுயற்சி படத்திற்கு முன்பே இப்படம் வெளியாகவுள்ள தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →