நடிகர் அஜித் குமார் கார் பந்தயப் பயிற்சியில் இணைந்துள்ளார்.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி திரைப்படங்களுக்கு நடுவே நடிகர் அஜித் குமார் வீனஸ் மோட்டர்ஸ் டூர்ஸ் என்கிற தன் இருசக்கர பயண நிறுவனத்தைத் துவங்கினார். இருசக்கர வாகனத்தில் தொலைத்தூரப் பயணங்களைத் திட்டமிடுபவர்களுக்கான தளமாக இது செயல்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில், 'அஜித் குமார் ரேஸிங்' என்கிற கார் பந்தயத்திற்கான முன்னெடுப்பையும் மேற்கொண்டார். இதன் நோக்கம், சர்வதேச அளவிலான வீரர்களை ரேஸிங்கில் ஈடுபட வைப்பதாகும்.
குட் பேட் அக்லி படப்பிடிப்பு முடிந்ததும், அஜித் இந்த ரேஸிங்கில் கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகின. அதேபோல், குட் பேட் அக்லி படப்பிடிப்பை முடித்த அஜித் தற்போது பார்சிலோனாவில் கார் ரேஸுக்கான பயிற்சியில் இணைந்துள்ளார்.
அவர் தன் காருடன் நிற்கும் புகைப்படத்தை நடிகர் அர்ஜுன் தாஸ் பகிர்ந்துள்ளார். இது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.