ஜாலியோ ஜிம்கானா டிரைலர்!
பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ஜாலியோ ஜிம்கானா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிப்பில், பேட்ட ராப் படம், உல்ஃப் என பல படங்கள் தயாராகி வருகின்றன.
பிஹைண்ட்வுட்ஸ் வழங்கும் இந்தத் திரைப்படத்தை, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மனோஜ் என்எஸ் இயக்கி வருகிறார்.
மூன் வாக் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இயக்குநர் சக்தி சிதம்பரம் ஜாலியோ ஜிம்கானா படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரபு தேவா உடன் நாயகியாக நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். உடன் அபிராமி, யோகி பாபு நடித்துள்ளார்கள்.
டிரான்ஸ்இந்தியா மீடியா & என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் நாளை (செப்.5) வெளியாகவிருக்கும் கோட் படத்திலும் பிரபுதேவா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.