நடிகர் லால். 
செய்திகள்

நடிகர் லால் மோசமாக நடந்துகொண்டார்: பெண் இயக்குநர் குற்றச்சாட்டு!

நடிகர் லால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...

DIN

நடிகர் லால் மீது பெண் இயக்குநர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

ஹேமா கமிட்டியால் மலையாளத் திரையுலகமே நடுங்கியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் எந்தெந்த பிரபலங்கள் மேல் குற்றச்சாட்டுகள் எழுகின்றன என்பதே மல்லுவுட்டின் பேசுபொருளாகியுள்ளன.

நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, முகேஷ், இடவேல பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சில நாள்களுக்கு முன் நடிகர் நிவின் பாலி மீதும் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதியப்பட்டது.

இந்த நிலையில், யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய பெண் இயக்குநர் ரேவதி எஸ். வர்மா பிரபல மலையாள நடிகர் லால் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். ரேவதி தமிழில் ஜூன். ஆர், மலையாளத்தில் மாட் மேட் (maad mad) உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

நேர்காணலில் பேசியபோது, ”மாட் மேட் படப்பிடிப்பின்போது நடிகர் லால், நான் பெண் என்கிற காரணத்தாலே என்னை மோசமான முறையில் நடத்தினார். காட்சிகளை எடுப்பதற்கு முன் இயக்குநராக நான் சொல்வதைக் கேட்காமல் படப்பிடிப்பு தளத்தில் அவமரியாதை செய்தார். பலமுறை இதை அனுபவித்தேன். அவருடன் சேர்ந்துகொண்டு இன்னும் சில முக்கிய நடிகர்களும் இதையே செய்தனர்.

நடிகர் லால்.

குறிப்பாக, அப்படப்பிடிப்பில் அவர்களிடம், ‘நான் ஷாட் ஒகே சொன்னதற்குப் பின் நாற்காலியில் அமர்ந்தால்போதும்’ என சொன்னேன். அதற்கு ஒருவர், ‘நீங்கள் சொல்வதைக் கேட்பதற்குப் பதில் கழிவறையில்போய் அமர்ந்துகொள்ளலாம்’ என்றார். இதைக்கேட்டு கோபத்தால் மயக்கம் அடைந்துவிட்டேன். ஹேமா கமிட்டி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயரை மறைப்பது பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்த அநீதி. ” எனக் கூறியுள்ளார்.

லால் தமிழில் சண்டக்கோழி, கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்றவர். அவர், பெண் இயக்குநரை அவமரியாதை செய்தது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT