லப்பர் பந்து பட போஸ்டர்.  
செய்திகள்

தினேஷ் - ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து பட பாடல்!

நடிகர்கள் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்துள்ள லப்பர் பந்து படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

DIN

சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானாலும் பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர்தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். 

ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இந்தப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. 5 மொழிகளில் ரீமேக் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அட்டக்கத்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தினேஷ். விசாரணை படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

டீசல், ‘அந்தகாரம்’ படத்தின் இயக்குநர் விக்னாராஜன் இயக்கத்தில் ஒன்றிலும் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார்.

தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். இதில் ஸ்வாஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணனன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

தற்போது, இந்தப் படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை கானா சேட்டு பாடியுள்ளார். மோகன் ராஜன் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுவும் கடந்து போகும்...

விவசாயிகள் சங்கம் சாா்பில் வெடி விபத்தில் பலியானோருக்கும் காயமடைந்தவா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்!

தை 3-ஆவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் விழா

புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

நிலப் பிரச்னையில் தாக்குதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT