செய்திகள்

சுந்தர். சி - வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ்!

நடிகர் வடிவேலுவின் புதிய படத்தின் அறிவிப்பு...

DIN

நடிகர் வடிவேலு - சுந்தர். சியின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகராக தன் பயணத்தை தொடங்கிய நடிகர் வடிவேலுவுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஏராளம். சிலகாலம் நடிக்காமல் இருந்துவருக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

காரணம், கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் வித்தியாசமாக நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து, ஃபஹத் - வடிவேலு முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ’மாரீசன்’ படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.

தற்போது, சுந்தர். சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’கேங்கர்ஸ்; எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர். சி இயக்க பென்ஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இது முழு நகைச்சுவை படமாக உருவாகப்படுவதாகத் தகவல்.

சுந்தர் . சி - வடிவேலு கூட்டணியில் உருவான வின்னர், கிரி, நகரம் படங்களின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மக்களால் ரசிக்கப்படுகின்றன.

இறுதியாக, சுந்தர்.சி இயக்கிய அரண்மனை - 4 திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

SCROLL FOR NEXT