செய்திகள்

சுந்தர்.சி - விஷால் பட அப்டேட்!

சுந்தர்.சி - விஷால் படத்தின் புரோமோ குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி ரூ. 50 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.

அடுத்ததாக, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து சுந்தர். சி புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து சுந்தர். சி விலகினார். இதற்கிடையே, மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்தார்.

தற்போது, நடிகர் விஷாலை நாயகனாக வைத்து புதிய திரைப்படத்தை இயக்கும் பணிகளில் இருக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பார்வை புரோமோ நாளை (ஜன. 21) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிக் கதைகள்! சாது மிரண்டால் காடு கொள்ளாது!

“அடுத்த ஹார்திக் பாண்டியா இவர்தான்”... முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் யாரைக் கூறுகிறார்?

ஆளுநர் உரை தேவையில்லை என அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம்: முதல்வர்

அர்ஜுன் தாஸ் - அன்னா பென் படத்தின் பெயர் போஸ்டர்!

ஆளுநர் ரவியின் வெளிநடப்பும் முதல்வர் ஸ்டாலினின் எதிர்வினையும்! | TN Assembly | R N Ravi | Stalin

SCROLL FOR NEXT