ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது, ஜூனியர் என்டிஆர் தனது 30வது படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் கொரடால சிவா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ‘தேவரா -1’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: எமர்ஜென்சி ரிலீஸ் தாமதம்... மிகுந்த தனிமையில் கங்கனா ரணாவத்!
அனிருத் இசையமைத்துள்ளார். தேவரா செப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
முன்னதாக, இப்படத்தின் முதல் பாடல், டிரைலரை கவனம் பெற்றன. இந்நிலையில் படக்குழு புரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்தனர்.
இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் அனிருத் பேசியதாவது:
தாரக் (ஜூனியர் என்.டி.ஆர்) அண்ணா ஹைதராபாத்தில் என்னுடைய சிறந்த நண்பர் என்று சொல்லாம். அவருடைய ஆற்றலும் என்னுடைய ஆற்றலும் ஒரே மாதிரி இருப்பதால் எளிதாக நண்பர்களாகிவிட்டோம். இயக்குநர் உடன் நாங்கள் சந்திக்கும்போது இயக்குநருக்குதான் பிரச்னை.
படத்தில் ஒரு அங்கமாக இருந்தது மிகப் பெருமை
ஜூனியர் என்.டி.ஆர். என்னுடன் மிகவும் உரிமையாக பேசுவார். அதை இப்போது வெளியே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு உரிமையாக பேசுவார். எனக்கு அவர் அண்ணா மாதிரிதான். எது வேண்டுமானாலும் அவரிடம் சொல்லாம். அவர் ஏன் பயங்கரமான நடிகர் என நான் நினைக்கிறேன் என்றால், அவர் திரையில் உணர்ச்சியைக் காட்டினால் நாமும் உணர்ச்சியை வெளிக்காட்டுகிறோம். கோபமாக நடித்தால் நாமும் கோபம் அடைகிறோம்.
தேவரா படத்தில் புதிய உலகம். கடினமான கதாபாத்திரம். அதில் பயங்கரமாக நடித்துள்ளார். இந்தப் படம் செம்மையாக ஓடுமென நம்புகிறேன். ஏனெனில் படத்தைப் பார்க்கும் முதல் பார்வையாளன் நாங்கள்தான். இசையமைப்பாளராக நானும் என்னுடன் 8-10 நபர்கள் படத்தைப் பார்ப்போம். இந்தப் படத்தில் ஒரு அங்கமாக இருந்ததற்கு மிகப் பெருமையாக இருக்கிறது.
அமெரிக்காவில் டிக்கெட் விறபனையில் ஏதோ அதிகமாக வசூலித்தாக சொல்கிறார்கள். ஆந்திரம், தெலங்கானவில் மட்டுமல்லாமல் தமிழிலும் நன்றாக வசூலிக்க வேண்டுமென விரும்புகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.