நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ள ஜெயம் ரவியின் சைரன்?
ஜெயம் ரவியின் சைரன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
ஜெயம் ரவியின் சைரன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்த்துக்குப் பின் ஜெயம் ரவியின் இறைவன் படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது. தொடர்ந்து, அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் எழுதி இயக்கும் 'சைரன்' என்ற படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார்.
இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் இப்படத்தினை தயாரிக்கின்றனர். கிரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
Advertisement
இந்த நிலையில், சைரன் திரைப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் ஜனவரி 26 குடியரசு நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: மாற்றத்துக்காக பயப்படாதீர்கள்: அமலா பால் பகிர்ந்த புதிய விடியோ!
நடிகர் ஜெயம் ரவி அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ’ஜீனி’ என்கிற ஃபேண்டசி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது