அண்ணா / வீரா தொடர்கள் படம் - இன்ஸ்டாகிராம்
செய்திகள்

திரைப்படம் போல ஒளிபரப்பாகும் சீரியல்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரு தொடர்கள் திரைப்படம் போன்று இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக ஒளிபரப்பாகின்றன.

இணையதளச் செய்திப் பிரிவு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரு தொடர்கள் திரைப்படம் போன்று இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக ஒளிபரப்பாகின்றன.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று (ஆக. 10) அண்ணா தொடர் இரண்டு மணிநேரம் தொடர்ந்து ஒளிபரப்பானது. இதேபோன்று திங்கள் கிழமையான இன்று (ஆக. 11) வீரா தொடர் இரண்டரை மணிநேரம் ஒளிபரப்பாகவுள்ளது.

இரு தொடர்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், மேலும் ரசிகர்களைக் கவரும் வகையில் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக ஒளிபரப்பப்படுகின்றன.

தொடர்களின் கதைக்களமும் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளதால், திரைப்படம் போன்று இரு தொடர்களும் ஒளிபரப்ப்படுவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு அண்ணா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், மிர்ச்சி செந்தில் நாயகனாகவும், நித்யா ராம் நாயகியாகவும் நடிக்கின்றனர். தூத்துக்குடியை பின்னணி களமாக வைத்துள்ளதால் வட்டார மொழி வழக்கில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இதேபோன்று, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு வீரா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் வைஷ்ணவி நாயகியாகவும், அருண் நாயகனாகவும் நடிக்கின்றனர்.

இந்த இரு தொடர்களும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில், குறிப்பிடத்தகுந்த டிஆர்பி பெறுவதால், மேலும் ரசிகர்களைக் கவரும் வகையில் தொடர்ந்து இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக இந்த வாரம் ஒளிபரப்பாகின்றன.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணி முதல் இரவு 7 மணி வரை அண்ணா தொடரும், திங்கள் கிழமை இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை வீரா தொடரும் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகின்றன.

இதையும் படிக்க | எதிர்நீச்சல் - 2 தொடரிலிருந்து விலகிய கனிகா.... காரணம் என்ன?

Anna and veera serials on Zee Tamil TV air for over two hours, like a movie.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

SCROLL FOR NEXT