கேப்டன் பிரபாகரன் போஸ்டர்.  படம்: கோபுரம் சினிமாஸ்.
செய்திகள்

800-க்கும் அதிகமான காட்சிகள்... மறுவெளியீடானது கேப்டன் பிரபாகரன்!

விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் மறுவெளியீடு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜயகாந்த் நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற கேப்டன் பிரபாகரன் திரைப்படம் இன்று (ஆக.22) மறுவெளியீடாகியுள்ளது.

இயக்குநர் ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு கேப்டன் பிரபாகரன் வெளியானது.

விஜய காந்த்தின் 100-ஆவது படமான இது அன்றைய நிலவரப்படி அதிக பொருள்செலவில் எடுக்கப்பட்டு திரையரங்குகளிலேயே 300 நாள்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்பெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில், வில்லனாக மன்சூர் அலிகானும் முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், லிவிங்ஸ்டன், ரூபினி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நடிகர் விஜய் நேற்றைய மாநாட்டிலும் விஜயகாந்த் குறித்து பேசினார்.

சமீபத்தில் லப்பர் பந்து படத்திலும் விஜயகாந்தின் ’பொட்டுவெச்ச தங்கக்குடம்..’ பாடல் கவனம் ஈர்த்தது.

கேப்டன் பிராபகரன் போஸ்டர்.

இந்நிலையில், கேப்டன் பிராபகரன் படம் 800-க்கும் அதிகமான காட்சிகளில் தமிழகம் முழுவதும் பல திரைகளில் மறுவெளியீடாகியுள்ளது.

The hugely popular film Captain Prabhakaran, starring actor Vijayakanth, has been re-released today (August 22).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அலுவலக குத்தகை 2 கோடி சதுர அடியாகக் குறைவு

ரூ.1,700 கோடிக்கு பங்கு வெளியீடு: லலிதா ஜுவல்லரிக்கு செபி ஒப்புதல்

புன்னைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை

அக்.22-இல் குடியரசுத் தலைவா் சபரிமலை பயணம்

ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT