நடிகை ஜான்வி கபூர் இறந்தவர்கள் குறித்து கேலி செய்யும் போக்கைக் கண்டித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் பெற்று வருகிறார். தெலுங்கில், தேவரா படத்தில் நடித்திருந்தார்.
தற்போது, தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதுடன் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அண்மையில் வெளியாகி மிகுந்த பாராட்டுகளைப் பெற்ற, ‘ஹோம் பவுண்ட்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில், மும்பையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய ஜான்வி, “மறைந்த என் அம்மா ஸ்ரீதேவியைக் குறித்து பேசும்போது மிகுந்த கவனத்துடன் பேச வேண்டியுள்ளது. காரணம், நான் விளம்பரம் தேடுவதாக நினைப்பார்கள் என்கிற பயத்திலேயே பலமுறை தயங்கியிருக்கிறேன்.
மேலும், இறந்தவர்களை மீம்ஸாக மாற்றி கேலிகள் செய்வது கண்டிக்கத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கு அதிகரித்துள்ளது. நடிகர் தர்மேந்திரா இறந்தபோதுகூட மீம்ஸ்கள் பகிரப்பட்டன. இன்னொருவரின் மரணத்தை மீம்ஸாக மாற்றுவது பரிதாபமான சூழலையே காட்டுகிறது.” எனத் தன் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிக்க: மூன் வாக் - 5 பாடல்களையும் பாடிய ஏ. ஆர். ரஹ்மான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.