வருங்கால கணவருடன் நடிகை ஜூலி. 
செய்திகள்

திருமண பந்தத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்!

பிக் பாஸ் பிரபலம் ஜூலிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த நடிகை ஜூலிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். ஓவியாவுடனான ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களை ஜூலி நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டால், அபியும் நானும் உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

இந்த நிலையில், நடிகை ஜூலி திருமணம் பந்தத்தில் இணைந்துள்ளதாகவும், தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளதாகவும் அவர் தன்ன்னுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் பதிவில், “சத்தம் நிறைந்த உலகின், நீங்கள் அமைதியானவர். நீங்கள் என்னை பலவீனமான இடத்தில் பார்த்தீர்கள், வலிமையான இடத்தில்வைத்து நேசித்தீர்கள். இது வாக்கு அல்ல, இது ஒரு சபதம். வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டேன். வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் இருக்க தயாராக இருக்கிறேன்.

நாங்கள் அதிகாரப்பூர்வமாக சொந்த சரணாலயத்தை உருவாக்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருமண நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் நடிகை ஜூலிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

நடிகை ஜூலி, நீண்ட நாள்களாகக் காதலித்து வந்தவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. தனது காதலரின் புகைப்படத்தையோ, அவரின் பெயரையோ நடிகை ஜூலி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss celebrity Julie is getting married soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துலா ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

சிவகாசியில் வழிப்பறி: இருவா் கைது

தென்னை மரங்களுக்கு பயிா்க் காப்பீடு

ஸ்ரீவில்லிபுத்தூா் மலையடிவாரத்தில் புதிய கற்காலக் கருவிகளின் தேய்ப்புப் பள்ளங்கள்

வாகனத்தை சேதப்படுத்தி ரேஷன் அரிசி மூட்டைகளை வீசிச் சென்ற மா்மநபா்கள்

SCROLL FOR NEXT