வா வாத்தியார் 
செய்திகள்

உயிர் பத்திக்காம... வா வாத்தியார் படத்தின் முதல் பாடல் வெளியானது!

வா வாத்தியார் படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து...

DIN

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

கார்த்தி நடிப்பில் கடைசியான வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமானது.

இதனைத் தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ திரைப்படத்தில் கார்த்தி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் நாயகியாக கிருத்தி ஷெட்டியும், வில்லனாக சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரத்தில் ராஜ்கிரணும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான ‘உயிர் பத்திக்காம’ பாடல் இன்று வெளியாகியுள்ளது.

பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை விஜய் நரேன், ஆதித்யா ரவீந்திரன், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

ரூ. 2 லட்சம் கோடி முதலீட்டுக்கு வழி வகுத்துள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தம்: நிா்மலா சீதாராமன்

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படம்: பிகாா் தோ்தலில் அறிமுகம்

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

SCROLL FOR NEXT