முகப்பு
கிங்ஸ்டன்
செய்திகள்

கிங்ஸ்டன் படத்தின் ’மண்ட பத்திரம்’ பாடல் வெளியானது!

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள கிங்ஸ்டன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

செய்திகள்

கிங்ஸ்டன் படத்தின் ’மண்ட பத்திரம்’ பாடல் வெளியானது!

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள கிங்ஸ்டன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

Updated On : 15 பிப்ரவரி, 2025 at 12:42 PM
கிங்ஸ்டன்
பகிர்:

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் படத்தின் இரண்டாவது பாடலான ’மண்ட பத்திரம்’ வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் கிங்ஸ்டன் படத்தை கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.

பேச்சிலர் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்த திவ்யபாரதியே, கிங்ஸ்டன் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். தனது நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமான கிங்ஸ்டன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ளார்.

கடலில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் மீனவரின் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மீனவராக நடிக்கிறார்.

யுகபாரதி வரிகளில் ஜிவி பிரகாஷ் குமார், சுப்லக்‌ஷினி இணைந்து பாடிய இந்தப் படத்தின் முதல் பாடலான ’ராசா ராசா’ சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இரண்டாவது பாடலான ’மண்ட பத்திரம்’ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை கானா ஃபிரான்சிஸ் எழுதிப் பாடியிருக்கிறார்.

கிங்ஸ்டன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்ற நிலையில், இப்படம் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →