குடும்பத்தினருடன் ஷாகித் கபூர். படங்கள்: இன்ஸ்டா / ஷாகித் கபூர்.
செய்திகள்

எனது குழந்தைகள் சினிமாவில் நடிக்க நான் விரும்பவில்லை: ஷாகித் கபூர்

தனது குழந்தைகள் சினிமாவில் நடிக்க நடிகர் ஷாகித் கபூர் விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

DIN

பிரபல பாட்காஸ்ட் நிகழ்ச்சியான ‘ஃபிகரிங் அவுட்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஹிந்தி நடிகர் ஹிந்தி நடிகர் ஷாகித் கபூர் தனது குழந்தைகள் சினிமாவில் நடிக்க தான் விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

தொடக்கத்தில் சில படங்களில் நடனமாடியிருந்த ஷாகித் கபூர் 2003இல் முதன்முதலாக நாயகனாக நடித்தார். பின்னர் பாம்பே டாக்கீஸ், ஹைதர், உட்தா பஞ்சாப் என விமர்சன ரீதியாக பாராட்டும் படங்களில் நடித்தார்.

பத்மாவத், கபீர் சிங் ஆகிய படங்கள் கமர்ஷியல் வெற்றியைக் கொடுத்தது.

தேவா போஸ்டர்

தற்போது, ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் தேவா படத்தில் நடித்துள்ளார். நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜன.31ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஷாகித் கபூர் பேசியதாவது:

எனது குழந்தைகள் சினிமாவுக்கு வர நான் விரும்பவில்லை

நான் எப்போதும் சரியான செயலையே செய்ய விரும்புகிறேன். அது எனக்குப் பிடிக்கிறது, மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை, அது என்னைச் சேதப்பட்டுத்தும் என்பதெல்லாம் நான் பார்ப்பதில்லை. நான் சரியான விஷயங்களையே செய்கிறேன்.

எனது குழந்தைகள் என்னைப் போல இருக்க வேண்டாம். என்னைவிடவும் அவர்கள் இயல்பிலேயே தைரியமாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். நான் இயல்பாகவே அந்த அளவுக்கு தன்னம்பிக்கை உடையவனல்ல. அதனால், அவர்கள் சினிமாவில் நடிக்க வர வேண்டாம்.

திரைத்துறையில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் இருக்கின்றன. கடினமான பாதை. அவர்கள் விரும்பினால் செய்யட்டும். ஆனால், இந்த கடினமாக வேலையை தவிர்த்து வேறெதாவது எளிமையான வேலையைத் தேர்ந்தெடுக்க பரிந்துரைப்பேன்.

தேவா திரைப்படம் - எனது சினிமா வாழ்க்கையில் அடுத்த படி

தேவா திரைப்படம் எனது மனதுக்கு அமைதியை தரும். சமீபகாலமாக பலரும் என்னை மாஸ் கமர்ஷியல் படத்தில் நடிக்க வேண்டுமென சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இந்தப் படம் எனது சினிமா வாழ்க்கையில் அடுத்த பரிணாமமாக இருக்கும். எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் சவாலான படமும் இதுவே. தேவா கதாபாத்திரத்தில் நிறைய இருக்கிறன. இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. ஜன.31இல் திரையரங்குகளில் பாருங்கள் என்றார்.

ஷாகித் கபூர் குடும்பம்.

மிரா ராஜ்புத்தை 2015இல் திருமணம் செய்தார் ஷாகித் கபூர். இந்தத் தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

சிங்கிள் மதர் (கணவரைப் பிரிந்த தாய்) உடன் தனியாக வளர்ந்ததால் குழந்தைகளை கடினமான வேலைக்கு அழைத்து செல்லாமல் எளிமையான வேலையைப் பார்க்கும்படி நினைப்பதாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

ரயிலில் இருந்து தவறிவிழுந்த பயணியை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு

கனரக வாகனங்களை புறவழிச்சாலையில் இயக்க பாமக கோரிக்கை

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு

மொடக்குறிச்சி அருகே லக்காபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

SCROLL FOR NEXT