ஆசைகள் ஆயிரம் போஸ்டர். 
செய்திகள்

25 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையுடன் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்!

25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தந்தை ஜெயராமுடன் சேர்ந்து நடிக்கிறார் காளிதாஸ் ஜெயராம்.

இணையதளச் செய்திப் பிரிவு

25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தந்தை ஜெயராமுடன் சேர்ந்து நடிக்கிறார் காளிதாஸ் ஜெயராம்.

கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் ஜெயராம் நடித்த கொஞ்சு கொஞ்சு சந்தோசங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் காளிதாஸ் ஜெயராம். இப்படத்தில் ஜெயராமின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தார்.

தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் அறிமுகமான இவர், பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம்.

அந்தத் தொடர் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 

மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது, ராயன் படத்திலும் காளிதாஸின் நடிப்பு கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில், கொஞ்சு கொஞ்சு சந்தோசங்கள் படத்துக்குப் பிறகு, தனது தந்தை ஜெயராமுடன் ஆசைகள் ஆயிரம் என்ற படத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

கோகுலம் கோபாலன் தயாரிப்பில் பிரஜித் இயக்கும் இப்படத்தில் ஜெயராம், காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்கள்.

ஆசைகள் ஆயிரம் திரைப்படம் தந்தை - மகன் உறவை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.

நடிகர் காளிதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,“பல ஆண்டுகள் கற்றலுக்குப் பிறகு ஒரு நடிகராக அவருடன்(ஜெயராம்) நிற்பது, எனது வாழ்க்கைப் பயணம் முழுமை பெறுவதாக உணர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kalidas Jayaram to act with his father after 25 years!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெஞ்சோடு இழுக்குற... ஜொனிதா!

பள்ளி, மருத்துவமனைகளை விட மசூதிகள் அதிகம்! எங்கு தெரியுமா?

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடல்

இந்த வாரம் கலாரசிகன் - 07-09-2025

நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

SCROLL FOR NEXT