செய்திகள்

சென்னையில் இளையராஜா சிம்பொனி கச்சேரி!

இளையராஜா தன் சிம்பொனி இசையை சென்னையில் நிகழ்த்தவுள்ளார்...

DIN

இளையராஜா லண்டனில் அரங்கேற்றிய சிம்பொனி இசையை சென்னையில் நிகழ்த்துவதாக அறிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா வேலியண்ட் எனப் பெயரிட்ட தன் சிம்பொனி இசையை லண்டனில் கடந்த மார்ச் மாதம் அரங்கேற்றம் செய்தார். சிம்பொனி இசைக்கென பிரபலமான ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழு இளையராஜாவின் இசைக்குறிப்புகளை வாசித்து அசத்தினர்.

இதனால், சிம்பொனியை எழுதி அதனை சர்வதேச அளவில் அரங்கேற்றிய ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை இளையராஜா பெற்றார்.

இந்த நிலையில், இன்று தன் பிறந்த நாளை முன்னிட்டு இளையராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “லண்டனில் அரங்கேற்றிய சிம்பொனி இசையை என் மக்களும் கேட்க வேண்டும் என்பதற்காக, வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன். லண்டனில் வாசித்தே ராயல் ஆர்கெஸ்ட்ரா குழுவினரே இங்கு வந்து வாசிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

இது இசை ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் இளையராஜாவின் சிம்பொனியைக் கேட்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பால் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT