நடிகர் ஸ்ரீகாந்த் கோப்புப்படம்
செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த சிக்கியது குறித்து...

DIN

போதைப்பொருள் பயன்படுத்தியது மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பாக அதிமுக நிர்வாகி பிரதீப் சென்னையில் உள்ள தனியார் மதுபானக் கூடத்தில் நடந்த அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இவரது செல்ஃபோனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதில் உள்ள வாட்ஸ்ஆப் எண்ணை சோதனை செய்தபோது, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதீப்புடன், நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாக தரவுகள் கிடைத்துள்ளது.

பிரதீப்பை கைது செய்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை செய்துள்ளனர். அதில் பிரதீப் இடம் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்குவது குறித்து பேசிய தகவல்கள் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் இன்று காலை 8 மணி அளவில் நடிகர் ஸ்ரீகாந்த்தை காவல்துறையினர். விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள F3 காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

முதல்கட்டமாக, ஸ்ரீகாந்த்திடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர், அவர் போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளாரா என்பதை அறிவியல் பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள சென்னை மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் அவரை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.

மேலும், ஆய்வு முடிவுகளில் ஶ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த், பிரதீப்பிடம் போதைப்பொருளை கிராம் ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கி இருக்கிறார்.

பிரதீப் வாக்குமூலத்தில் ஸ்ரீகாந்த் 40 முறை போதைப்பொருள் வாங்கி உள்ளதாகவும் அதற்கான பணத்தை பிரதீப்புக்கு ஸ்ரீகாந்த்துக்கு அனுப்பி உள்ளார். அதன் அடிப்படையில் 4 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பண பரிவர்த்தனை நடந்துள்ளது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத அா்ப்பணிப்புடன் தேச சேவையாற்ற வேண்டும்: தில்லிவாசிகளுக்கு துணை நிலை ஆளுநா் வேண்டுகோள்

தில்லி, என்சிஆரில் தமிழ் அமைப்புகள் சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

தலைநகரில் சுதந்திர தினத்தை வரவேற்ற மழை!

காவல்நிலைய தலைமைக் காவலருக்கு லஞ்சம்: விடியோ காட்சியால் விசாரணைக்கு உத்தரவு

தலைநகரில் அடுத்த சில நாள்கள் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி

SCROLL FOR NEXT