நடிகை ஷில்பா ஷெட்டி ஜகரான் திரைப்பட விழாவில் ரசிகர்கள் மாறிவிட்டதால் சரியான படங்களை தேர்வு செய்ய வேண்டுமென பேட்டியளித்துள்ளார்.
ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஷில்பா ஷெட்டி தமிழில் பிரபு தேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தார். மேலும் குஷி படத்தில் நடிகர் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
திரையரங்கில் கடைசியாக வெளியான சுகி படத்தில் 2023இல் நடித்திருந்தார். 2024இல் அமேசான் பிரைமில் வெளியான இந்தியன் போலீஸ் போர்ஸ் தொடரிலும் நடித்திருந்தார்.
கேடி தி டெவில் எனும் படத்தில் நடித்து முடித்துள்ள ஷில்பா ஷெட்டி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சினிமாவில் கடினமான காலகடத்தில் இருக்கிறோம். இன்றைய சினிமாவில் ஆண் அல்லது பெண் பார்வையாளர்களில் கவனத்தை பெறுவதில் சிக்கல் இருக்கிறது. நல்ல கதைகளைதான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். இப்போது ரசிகர்கள் மாறிவிட்டார்கள்.
தற்போது சினிமாக்களை பார்க்க பல விதமான முறைகள் இருக்கின்றன. பல ஓடிடி தளங்கள் உள்ளதால் அவர்களது தேர்வு பிரிந்து கிடக்கிறது. அதனால் நடிகர்கள் சரியான தேர்வை மேற்கொள்ள வேண்டும்.
பல ஓடிடிகள் இருப்பது ஒரு வகையில் வரமும் சாபமும் ஆக இருக்கிறது. இருமுனைக் கத்தியாக இருக்கிறது.
படங்களில் நடிக்காதபோதும் எனக்கு ஓடிடி ரசிகர்கள் ஆதரவு அளிக்கிறார்கள். ஓடிடி பார்வையாளர்களை நாம் குறைவாக மதிப்பிடுகிறோம்.
சில நேரங்களில் படங்கள் தோற்றாலும் பாடல் ஹிட்டாகும். அதனால்தான் இவ்வளவு காலங்கள் சினிமாவில் தாக்குப் பிடித்தேன் என நினைக்கிறேன். ஓவ்வொரு பாடலும் எனக்கு மைல்கற்கள்தான்.
சில படங்களில் நன்றாக நடித்தும் கவனம் பெறாமல் சென்றுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.