மாரீசன் திரைப்படத்தின் வெளியீடு குறித்து அறிவித்துள்ளனர்.
மாமன்னனில் மிகச்சிறப்பாக நடித்த வடிவேலுவை நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முயன்று வருகின்றனர். அதற்காக, நிறைய கதைகளை வடிவேலு கேட்டு வருகிறார்.
அப்படி, ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரும் மாரீசன் என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தை மலையாள இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இப்படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: எம்புரான் 3 நிமிட காட்சிகள் நீக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.