நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்ததாக அறிவித்துள்ளார்.
இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உன்னைச் சரணடைந்தேன் படத்தில் நடித்த நடிகை மீரா வாசுதேவன், தனது கணவருடன் விவாகரத்து செய்ததாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்த பதிவில், மீரா வாசுதேவன் ``2025 ஆகஸ்ட் முதல் நான் சிங்கிளாகி விட்டேன். என் வாழ்க்கையின் அழகான மற்றும் அமைதியான கட்டத்தில் நான் இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் நடித்துள்ள மீரா வாசுதேவன், 2005 ஆம் ஆண்டில் ஒளிப்பதிவாளரான அசோக் குமாரின் மகன் விஷால் அகர்வாலை திருமணம் செய்தார். இருப்பினும், இருவரும் 2010-ல் விவாகரத்து செய்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, 2012-ல் நடிகர் ஜான் கொக்கேனை மீரா வாசுதேவன் திருமணம் செய்தார். ஜான் கொக்கேனையும் 2016-ல் விவாகரத்து செய்தார்.
தொடர்ந்து, 2024 ஏப்ரல் மாதத்தில்தான் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை மீரா திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், விபினுடனும் மீரா வாசுதேவன் விவாகரத்து செய்துகொண்டார்.
இதையும் படிக்க: இந்த சர்ச்சையால்... கண்ணீர்விட்ட கயாது லோஹர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.