முகப்பு
செய்திகள்

அரசனில் சிம்புவின் தோற்றம் இதுதான்!

சிம்புவின் புதிய தோற்றம்....

Updated On : 8 அக்டோபர், 2025 at 10:52 AM
நடிகர் சிலம்பரசன்
பகிர்:

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசன் படத்திற்கான அவரது தோற்றம் தெரிய வந்துள்ளது.

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் வடசென்னையில் நடித்த சில நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு அரசன் எனப் பெயரிட்டுள்ளனர். இப்படமும் வடசென்னை காலகட்டத்துடன் தொடர்புடைய கதையாகவே உருவாகவுள்ளது.

இப்படத்தின் புரோமோ டீசர் தீபாவளி வெளியீடாக வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், அரசன் படத்திற்காக நடிகர் சிம்பு இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார். இளம்வயது தோற்றத்திற்காக உடல் எடையைக் குறைத்து, தாடியுடன் நடிக்கிறார். 40-களில் இருக்கும் தோற்றம் உடல் எடை கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் இளம் தோற்றத்திற்கு சிம்பு மாறியுள்ளது அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

actor silambarasan's new look for arasan movie

முழு கட்டுரையைப் படிக்க →