ஜீவா 
செய்திகள்

படிச்சு படிச்சு சொன்னனே, கண்டிஷன்ஸை... தலைவர் தம்பி தலைமையில் டீசர்!

தலைவர் தம்பி தலைமையில்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ஜீவா தன் 45-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கிய இப்படத்திற்கு, ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன் முதல் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது.

இதில், நாயகியாக பிரார்தனாவும் தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். இதில், கரூர் பலியின் போது அமைச்சர் அன்பில் மகேஷ், ‘படிச்சு படிச்சு சொன்னேனே, கண்டிஷன்ஸை பாலோ பண்ணுங்கன்னு’ என பேசிய விடியோ வைரலானது.

இதனை, இப்படத்தில் வசனமாக வைத்திருக்கின்றனர். மேலும், அன்பில் மகேஷ் சிரிப்பதுபோல் இறுதிக்காட்சியில் ஜீவாவும் சிரிக்கிறார். இந்த டீசர் நகைச்சுவையாக இருந்தாலும் என்னென்ன எதிர்வினைகளைச் சந்திக்கப்போகிறதோ...

jiiva's thalaivar thambi thalaimaiyil movie teaser out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் ஸ்பாட் 2

வாக்காளா் சோ்க்கைக்கு இன்று சிறப்பு முகாம்கள்

குடியரசு தினம்: ஆளுநா் நாளை கொடியேற்றுகிறாா்

குடியரசு தினம்: ரயில் நிலையங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க உத்தரவு

வளா்ச்சியும் பாரம்பரியமும் கைகோத்து பயணிக்கும் மாநிலம் உ.பி.: பிரதமா் மோடி புகழாரம்

SCROLL FOR NEXT