இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் சிலம்பரசன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் புரோமோ விடியோ எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை திரைப்படத்தின் காலகட்டத்தைத் தொட்டு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களமாக உருவாகி வருகிறது.
இதில் நாயகனாக நடிகர் சிலம்பரசனும் முக்கிய கதாபாத்திரங்களில் வடசென்னை திரைப்படத்தில் நடித்தவர்களும் நடிக்கின்றனர்.
அண்மையில், இப்படத்தின் புரோமோ பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது. ஆனால், இணையத்தில் இருந்த எதிர்பார்ப்பு டீசர் பார்வைகளில் வெளிப்படவில்லை.
யூடுயூபில் இதுவரை இப்படத்தின் புரோமோ டீசர் 14 லட்சம் (1.4 மில்லியன்) பார்வைகளை மட்டுமே பெற்று கொஞ்சம் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. இதில் சிம்புவின் முகமோ முக்கியமான காட்சியோ இடம்பெறவில்லை என்பதே பார்வை குறைவுக்குக் காரணமாகத் தெரிகிறது.
நடிகர் சிலம்பரசனுக்கு தக் லைஃப் தோல்விப் படமாக அமைந்ததால் இப்படத்திற்காக சிம்பு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: ஆச்சரியப்படுத்தும் லோகா வசூல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.