முகப்பு
ஸ்பெஷல்

இவர்கள் நட்சத்திரக் குழந்தைகள்!

சினிமா நடிகர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பத்தை திரை வெளிச்சத்திலிருந்து தள்ளி வைத்திருப்பார்கள்.

Updated On : 23 அக்டோபர், 2017 at 4:06 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:26 PM

சினிமா நடிகர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பத்தை திரை வெளிச்சத்திலிருந்து தள்ளி வைத்திருப்பார்கள். தேவையற்ற கவனம் அவர்கள் மீது குவிந்து அவர்களது இயல்பு வாழ்க்கை சங்கடத்துக்குள்ளாவதை அவர்கள் விரும்புவதில்லை. அதிலும் குறிப்பாக தென்னிந்திய நடிகர்கள் தங்கள் குடும்பத்தினரைப் பற்றிய தகவல்களையோ, தங்களின் குழந்தைகளின் புகைப்படங்களையோ அதிகம் பகிர்ந்து கொள்வதில்லை. 

அதையும் மீறி சில சமயம் தங்களது ரசிகர்களுக்காக நடிகர்கள் சமூக வலைத்தளங்களில் சில கொண்டாட்டமான தருணங்களை பகிர்ந்து வருகிறார்கள். அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.

அஜித்தின் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்

Advertisement

அஜித் - ஷாலினி தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவள் அனோஷ்கா, இளையவன் ஆத்விக். 'ஜுனியர் தல’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஆத்விக்கின் புகைப்படம் அஜித் ஃபேன் க்ளப்பில் வெளிவந்ததும் அதிகமாக பகிரப்பட்டது. 

சூர்யாவின் குழந்தைகள் தியா மற்றும் தேவ்

சூர்யா ஜோதிகா தம்பதியரின் குழந்தைகள் தியா மற்றும் தேவ். தியா அம்மா ஜோதிகாவைப் போல க்யூட் சிரிப்புடன் உள்ளார்.

தனுஷின் குழந்தைகள் லிங்கா மற்றும் யாத்ரா

தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியருக்கு இரண்டு மகன்கள். லிங்கராஜா யாத்ரராஜா என்பதே அவர்களின் முழுப் பெயர். தனது இமயமலைப் பயணத்தின் நினைவாக இந்தப் பெயரை அவர்களின் தாத்தா ரஜினி காந்த் வைத்துள்ளார்.

மாதவனின் மகன் வேதாந்த்

மேடி என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தற்போது நன்றாக வளர்ந்து பதின் பருவத்தில் உள்ளார். அப்பாவைப் போல் நடிகராகும் முயற்சியில் வேதாந்த் இருக்கிறாரா என்பதை இன்னும் சில ஆண்டுகள்  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குஷ்புவின் மகள்கள் அவந்திகா மற்றும் அனந்திதா

சுந்தர்.சி குஷ்பு தம்பதியரின் மகள்கள் அவந்திகா மற்றும் அனந்திதா. அம்மாவைப் போல பப்ளியாகவும் அப்பாவைப் போல உயரமாகவும் உள்ளார்கள் இவர்கள்.

 விஜயின் குழந்தைகள் சஞ்சய் மற்றும் திவ்யா

விஜய் சங்கீதா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள். மகன் ஜேசன் சஞ்சய் மூத்தவன், இளையவள் திவ்யா சாஷா. வேட்டைகாரனில் விஜயுடன் ஆடி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் சஞ்சய் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.