பிரசாரத்தில் அனுராக் தாக்குர்
தேர்தல் செய்திகள்

ஊழலின் பொருள் காங்கிரஸும், ஆம் ஆத்மியும்: அனுராக் தாக்குர்

காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மியும் ஊழலின் பொருள்கள் என மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்குர் விமர்சித்தார்.

DIN

காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மியும் ஊழலின் பொருள்கள் என மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்குர் விமர்சித்தார்.

ஹிமாசலப் பிரதேசம் ஹமீர்பூர் பகுதியில் அமைச்சர் அனுராக் தாக்குர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, டோக்லாம் பகுதியில் சீன ராணுவத்துக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தபோது சீனாவுடன் மறைமுகமாக தொடர்பில் இருந்தது காங்கிரஸ்.

சீனாவில் இருந்து காங்கிரஸ் எவ்வளவு பணம் பெற்றுள்ளது? இதற்கான ஒப்பந்தங்கள் பின்வாசல் வழியாக கையெழுத்திடப்பட்டன. இதனை பொதுவெளியில் ராகுல் காந்தியால் கூற முடியுமா?

ஊழலின் பொருள் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள். அவற்றிற்கு மக்கள் மீது அன்பும் நம்பிக்கையும் இல்லை. பணத்தை கொள்ளையடிக்கவும், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் மட்டுமே அவர்கள் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்.

நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை அரசியலிலிருந்து தூக்கியெறிவார்கள் எனப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐஏஎஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்தது ஏன்? - அமைச்சர் ரகுபதி!

உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? இந்த 5 விஷயங்கள் போதும்!!

ஸ்மார்ட்போன்களுக்கு இனி புதிய ஓஎஸ்! அறிமுகம் செய்தது ஓப்போ!

அழகு பூஞ்சோலை... பார்வதி!

முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொளி... மான்யா கௌடா!

SCROLL FOR NEXT