வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா...? இஸ்ரோவில் மொழிப்பெயர்பாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தினமணிபெங்களூருவில் உள்ள இஸ்ரோ நிறுவத்தில் காலியாக உள்ள மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். HSFC/02/RMT/2021

பணி: Junior Translation Officer

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 18 முதல் 34க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பாடங்களுடன் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இளநிலை அல்லது முதுநிலை படிப்பில் மேற்கண்ட இரு பாடங்களையும் படித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் இருந்து ஹிந்தி, ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மொழிபெயர்க்கும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் பிரிவினர் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.11.2021

மேலும் விவரங்கள் அறிய www.isro.gov.in  அல்லது https://www.isro.gov.in/sites/default/files/jto_advt_final_pdf_-14.10.2021.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

நேபாளம்: செய்தி நிறுவன தலைவர் கைது!

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன்!

ஊழலின் பொருள் காங்கிரஸும், ஆம் ஆத்மியும்: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT