வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கலாம் வாங்க... வட்டார இயக்க மேலாளர், ஒருங்கிணைப்பாளர் பணி

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டாரங்களில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான 3 வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் 15 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கான

தினமணி



கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டாரங்களில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான 3 வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் 15 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 18 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  

பணி: வட்டார இயக்க மேலாளர்கள்
காலியிடங்கள்: 03
தகுதி: இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இதுபோன்ற திட்டங்கலில் பணி அனுபவம் உள்ளவர்கள், சிறந்த தலைமைப் பண்பு மற்றும் தகவல் தொடர்பாளர், கணினி இயக்குநவதில் நல்ல திறமை உடையவர்களாக இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் மதிப்பூதியமாக ரூ.15,000 வழங்கப்படும். 

பணி: வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்
காலியிடங்கள்: 15
தகுதி: பிளஸ் 2 தேர்வு மற்றும் அதற்கு மேலான தகுதி பெற்றவர்கள், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள், இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இருப்பவர்கள், தகவல் தொடர்பு, கணினி இயக்குவதில் திறமையானவர்களாக இருக்க வேண்டும்.]
சம்பளம்: மாதம் மதிப்பூதியமாக ரூ.12,000 வழங்கப்படும். 
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம் கரூர். 

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி:  07.04.2022 அன்று மாலை 5.45 மணிக்குள்  நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய https://karur.nic.in அல்லது https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2022/03/2022033071.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT