வேலைவாய்ப்பு

ரூ.56,100 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வேண்டுமா? - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குநர்(பெண்கள் மட்டும்) பதவிகளுக்கு காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை

தினமணி


சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குநர்(பெண்கள் மட்டும்) பதவிகளுக்கு காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 16 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக மட்டுமே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதவி: உதவி இயக்குநர்

காலியிடங்கள்: 11

தகுதி: பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் கல்லூரி, பல்கலைக் கழகத்தில் ஹோம் சயின்ஸ் அல்லது சைக்காலஜியில் முதுகலை பட்டம், சமூகவியல், குழந்தை வளர்ச்சி, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சமூகப் பணியியல், மறுவாழ்வு அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி கணக்கிடப்படும். 
 
கட்டணம்:  நிரந்த பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு அமைந்த வாய்மொழித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள்: 05.11.2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/15_2022_AD_Social_Welfare_Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

வாகன விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளி 42-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

திண்டுக்கல், பழனியில்  நாளை மின்தடை

SCROLL FOR NEXT