வேலைவாய்ப்பு

மத்திய அரசின் ரசாயன நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! 

மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்  நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்  நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 111

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: டெக்னீசியன் (மெக்கானிக்கல்) - 51
பணி: டெக்னீசியன் (எலக்ட்ரிக்கல்) - 32
பணி: டெக்னீசியன் (இன்ஸ்ட்ரூமென்டேசன்) - 28

தகுதி: பொறியியல் துறையில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்து, இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 01.03.2022 தேதியின்படி,  31 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  www.rcfltd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.700. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.04.2022 

மேலும் விவரங்கள் அறிய https://www.rcfltd.com/files/Detailed_Advt%20-%20Technician%2015_03_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT