வேலைவாய்ப்பு

பாராமெடிக்கல் துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

தேசிய பாரா மெடிக்கல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள சூப்பர்வைசர் மற்றும் உதவியாளர், இளநிலை டெக்கினிக்கல் உதவியாளர் போன்ற பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

DIN

அகமதாபாத்தில் உள்ள தேசிய பாரா மெடிக்கல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள சூப்பர்வைசர் மற்றும் உதவியாளர், இளநிலை டெக்கினிக்கல் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Scientist/Technical Supervisor(Grade-1)

காலியிடங்கள்: 2

தகுதி: எம்.எஸ்சி., எம்.பார்ம், எம்.வி.எஸ்சி தேர்ச்சியுடன் நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

ணி: Scientists/Technical Supervisor(Grade II)

காலியிடங்கள்: 2

தகுதி: எம்.எஸ்சி., எம்.பார்ம்., எம்.வி.எஸ்சி படிப்புடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Administrative Officer

காலியிடங்கள்: 1

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Secretary to Registrar

காலியிடங்கள்: 1

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant(Grade II)

காலியிடங்கள்: 1

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Technical Assistant

காலியிடங்கள்: 4

தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு வருவோர் அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.niperahm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.7.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

Fake Dating! | சமூக வலைதளத்தில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

SCROLL FOR NEXT