தேசிய ரேடியோ வானியற்பியல் மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Assistant-B(Electronics) - 1
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 58,986
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant-B(Electronics/Computers) - 1
தகுதி: கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 58,986
வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Laboratory Assistant-B (Electronics) - 1
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Laboratory பிரிவில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37,203
வயதுவரம்பு: 31-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Tradesman-B(Electrical) - 1
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 37,203
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Tradesman-B(Electronics) - 1(OBC)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியிடன் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37,203
வயதுவரம்பு: 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Driver-B(ST) -1
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 33,991
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Clerk-A(General Admin)- 1
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டப்படிப்புடன் தட்டச்சு அறிவும், கணினி அறிவும் மற்றும் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 37,203
வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Work Assistant A(EWS,OBC,SC) - 3
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 29,970
வயதுவரம்பு: முறையே 28, 31,33-வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://tinyuri.com/ncrajob2024 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.07.2024.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.