வடக்கு எல்லைப்புற ரயில்வே காலியாகவுள்ள விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். : 03/2025
பணி: Sports Person (Sports Quota 2025-26)
காலியிடங்கள்: 56
வயது வரம்பு: 1.1.2026 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 (கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருப்பவர்களுக்கு கிரேடு சம்பளம் கூடுதலாக வழங்கப்படும்).
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10-ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்திருக்க வேண்டும். மேற்கண்ட கல்வித் தகுதியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவ தொன்றில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான போட்டி களில் விளையாடி குறைந்தது மூன் றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய விளையாட்டுத் தகுதிகள் பற்றிய கூடுதல் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: விளை விண்ணப்பதாரரின் யாட்டுத்தகுதி மற்றும் விளை யாட்டு சாதனைகள் அடிப்படை யில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்காக விளையாட்டுத் திறன் தேர்வு மற் றும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இது பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரயில் வேயில் எழுத்தராக (கிளார்க்) பணியமர்த் தப்படுவர். 1.4-2023 தேதிக்கு பிந்தைய விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மையினர் ரூ.250. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nfr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.10.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.