அரசுப் பணிகள்

வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? - டிஆர்பி அறிவிப்பு

Applications are invited for Direct Recruitment from eligible candidates for the post of Block Educational Officer in the Directorate of Elementary Education

தினமணி

தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 5 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: வட்டார கல்வி அலுவலர்(Block Educational Officer)

காலியிடங்கள்: 33

சம்பளம்: மாதம் ரூ.36,900-1,16,600

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டம்(பி.எட்) முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கட்டாய தமிழ் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வுக் கட்டணம்: ரூ.600. இதில் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 5.7.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT