மீரட் - லக்னோ, மதுரை - பெங்களூரு மற்றும் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையேயான மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 31, 2024) காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  
செய்திகள்

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

DIN
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் மற்றும் பெங்களூரு - மதுரை வந்தே பாரத் விரைவு ரயில்களையும் பிரதமர் மோடி தில்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் (20627), சென்னை எழும்பூரில் இருந்து புதன்கிழமை தவிர மற்ற வார நாட்களில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, மதியம் 01.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20628) நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
மதுரை - பெங்களூர் கன்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயில் (20671), செப்டம்பர் 2 முதல் மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை தவிர மற்ற வார நாட்களில் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்றடையும். மறு மார்க்கத்தில், பெங்களூரு கண்டோன்மெண்ட் - மதுரை வந்தே பாரத் ரயில் (20672), பெங்களூரு கண்டோன்மெண்ட்டில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மீரட் - லக்னோ, மதுரை - பெங்களூரு மற்றும் சென்னை - நாகர்கோவில் இடையேயான மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பங்கேற்றனர்.
கட்சித் தலைவர்களுடன் மீரட்டில், மீரட் - லக்னோ வரையிலான வந்தே பாரத் ரயிலின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பாஜக எம்.பி அருண் கோவில்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ரயில் இயக்கப்பட்டதால் அதிக வரவேற்பையும் பெற்றிருக்கிறது. விழாவில் பங்கேற்ற ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர்.
பிரதமர் நரேந்திர மோடி விடியோ கான்பரன்சிங் மூலம் மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கும் விழாவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் கலந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT