பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
இன்று தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:08 PM
புதுதில்லி: இன்று தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய செய்தியில், ' பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ பிரார்த்தனை செய்கிறேன்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.