முகப்பு
இந்தியா

ஆர்.எஸ்.எஸின் சீருடை மாற்றத்திற்கு காரணம் என் மனைவிதான்: லாலு பிரசாத் யாதவின் 'லொள்ளு'!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தற்போதைய சீருடை மாற்றத்திற்கு காரணம் என் மனைவிதான் என்று ராஷ்டிரிய ஜனதா தள  தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ்  தெரிவித்துள்ளார்.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:44 AM
பகிர்:

பாட்னா: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தற்போதைய சீருடை மாற்றத்திற்கு காரணம் என் மனைவிதான் என்று ராஷ்டிரிய ஜனதா தள  தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ்  தெரிவித்துள்ளார்.

லாலு பிரசாத் யாதவ் இன்று பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்பொழுது அவர் கூறியதாவது:

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தங்களுடைய சீருடையை வழக்கமான அவர்களது காக்கி நிற அரைக்கால் சட்டையிலிருந்து முழு பேண்டாக மாற்றியுள்ளனர். இதற்கு நாங்கள்தான் காரணமாக இருந்துள்ளோம்.    என் மனைவி ராப்ரி தேவிதான் உடைகள் குறித்த அவர்களது அநாகரீகமான செயலை முதன்முதலில் சுட்டிக் காட்டியுள்ளார் என்று லாலு தெரிவித்தார்.

ராப்ரி தேவி இந்த ஆண்டு ஜனவரியில், ' ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ள வயதானவர்கள், பொதுவெளியில் அரைக்கால் சட்டை அணிந்து கொண்டு திரிவது வெட்கமாக இல்லையா?' என்று கேள்வி  எழுப்பியிருந்தார்.அதற்கு அப்பொழுது பாஜகவின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் கடும் கண்டனங்கள்  எழுந்தன.

அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதம் சீருடை மாற்றம் பற்றிய அறிவிப்பை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை வெளியிலிட்டது.  

அதை மனத்தில் வைத்தே லாலு இந்த கருத்தைக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →