முகப்பு
இந்தியா

பயங்கரவாத நாடான பாகிஸ்தானை தனிமை படுத்த வேண்டும்: ராஜ்நாத் சிங் கண்டனம்!

காஷ்மீரின் உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதற்கு காரணமான பாகிஸ்தானை  தனிமை படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்

இந்தியா

பயங்கரவாத நாடான பாகிஸ்தானை தனிமை படுத்த வேண்டும்: ராஜ்நாத் சிங் கண்டனம்!

காஷ்மீரின் உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதற்கு காரணமான பாகிஸ்தானை  தனிமை படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

காஷ்மீரின் உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதற்கு காரணமான பாகிஸ்தானை  தனிமை படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது இன்று காலை  பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல்நடத்திய  4 பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் காயம் அடைந்த 19 ராணுவ வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த உடன் ராணுவ தளபதி தல்பீர் சிங் சுகாக் உடனடியாக டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்றார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது ரஷிய சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டு டெல்லியில் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் மற்றும் ராணுவம், உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த சிறப்பு கூட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் ’ரா’ உளவுப்பிரிவு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் உரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பிறகு ராஜ்நாத் சிங் தனது டிவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடாக அடையாளப்படுத்தப்பட்டு , அதனை தனிமை படுத்த வேண்டும்,” என்று வலியுறுத்தி உள்ளார்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்பதற்கு உறுதியான அறிகுறிகள் உள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நேரடியாக உதவிசெய்து வருவது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என்றும் ராஜ்நாத்சிங் கூறி உள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →