செல்ஃபி எடுக்கும் பொழுது ஏரிக்குள் தவறி விழுந்த மாணவி: காப்பாற்றச் சென்ற நண்பர்கள் பலி !
ஆந்திராவில் செல்ஃபி எடுக்கும் பொழுது ஏரியில் தவறி விழுந்த தோழியை காப்பாற்ற முயன்ற ஐந்து பேர் நீரில் மூழ்கி பலியானர்கள்.
ஆந்திராவில் செல்ஃபி எடுக்கும் பொழுது ஏரியில் தவறி விழுந்த தோழியை காப்பாற்ற முயன்ற ஐந்து பேர் நீரில் மூழ்கி பலியானர்கள்.
இது பற்றி கூறப்படுவதாவது:
தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வாகதேவி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலர் அருகில் உள்ள தர்மசாகர் ஏரிக்கு பயணம் சென்றனர். அப்பொழுது அவர்களில் ஒரு மாணவியான ரம்யா பிரதியூஷா, செல்ஃபி எடுக்க முயன்ற பொழுது எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்தார்.
Advertisement
அவரது கதறலைக் கேட்டு அவரது நண்பர்கள் ஐந்து பேர் அவரைக் காப்பற்றும் பொருட்டு ஏரியில் குதித்தனர். ரம்யா எப்படியோ தபபி கரை ஏறி விட்ட நிலையில், அவரது நண்பர்கள் ஐந்து பேரும் நீரில் பரிதாபமாக மூழ்கி இறந்தனர்.
இறந்தவர்களில் மூன்று பேர் ஆண்கள்; இரண்டு பேர் பெண்களாவர்.