பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு: ஐ,நாவில் நவாஸ் ஷெரிப் பேச்சுக்கு இந்தியா பதிலடி!
தீவிரவாதத்தை தேசிய கொள்கையாக பின்பற்றி வரும் நாடு என்று பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
இந்தியாபாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு: ஐ,நாவில் நவாஸ் ஷெரிப் பேச்சுக்கு இந்தியா பதிலடி!
தீவிரவாதத்தை தேசிய கொள்கையாக பின்பற்றி வரும் நாடு என்று பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
தீவிரவாதத்தை தேசிய கொள்கையாக பின்பற்றி வரும் நாடு என்று பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
ஐ.நா.வின் 71-ஆவது பொது சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய ஐ.நாவுக்கான இந்திய முதன்மை செயலர் ஈனம் காம்பிர், உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல் என்பது தீவிரவாதம்தான். இதை ஒரு தேசிய கொள்கையாக பின்பற்றி வரும் பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு என்று ஆக்ரோஷமாக பதிலளித்தார்.
இந்தியா தொடர்பாக பாகிஸ்தான் தொடர்ந்து இது போன்ற அவதூறுகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவம் தொடங்கி, சமீபத்திய நியூயார்க் குண்டு வெடிப்பு வரை அதில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானில் அடைக்கலமும், அரவணைப்பும் பெற்றிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலகம் முழுவதும் இருந்து தீவிரவாதச் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுபவர்களை பாகிஸ்தான் ஈர்த்து வருகிறது. இதன் விளைவுகள் உலகம் முழுவதும் உணரப்படுமென்றும் அவர் தனது பேச்சில் எடுத்துரைத்தார்.