இந்தியா

வெற்றியோ தோல்வியோ உண்மையின் பக்கம் நிற்போம்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சூளுரை! 

தேர்தல் அரசியலில் வெற்றியோ தோல்வியோ, நாம் எப்போதும்  உண்மையின் பக்கம் நிற்போம் என்று  காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாளில், அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார்.

PTI

புதுதில்லி: தேர்தல் அரசியலில் வெற்றியோ தோல்வியோ, நாம் எப்போதும்  உண்மையின் பக்கம் நிற்போம் என்று  காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாளில், அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட தினத்தினை நினைவு கூறும் விதமாக தில்லியில் இன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டமானது தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தினை காப்பதும், ஒவ்வொரு குடிமக்களின் எதிர்காலத்துக்காகப் போராடுவதும் நமது கடமை.

காங்கிரஸ் கட்சி மகத்தான வரலாறு கொண்டது. நமது செயல்பாட்டின் மையப் புள்ளியாக எப்போதும் இருப்பது உண்மைதான். அதை நோக்கிய நமது போராட்டம் தொடர்ந்தபடி இருக்கும்.

நமது நாட்டினை வஞ்சகம் ஒரு வலையாக சூழ்ந்துள்ளது. ஒரு பொய்யினை அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்தலாம் எனும் அடிப்படையில் பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால் தேர்தல் அரசியலில் வெற்றியோ தோல்வியோ, நாம் எப்போதும்  உண்மையின் பக்கம் நிற்போம்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT