முகப்பு
இந்தியா

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட ஐந்து ராணுவ வீரர்கள் மரணம்!

காஷ்மீரில் பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட ஐந்து ராணுவ வீரர்கள் சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் மரணம் அடைந்தார்கள் .

Updated On : 30 ஜனவரி, 2017 at 4:47 PM
பகிர்:

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட ஐந்து ராணுவ வீரர்கள் சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் மரணம் அடைந்தார்கள் .

ஜம்மு காஷ்மீரின் மச்சில் பகுதியில் பனிச்சரிவில் ஐந்து ராணுவ வீரர்கள் சிக்கித் தவித்தனர். உடனடையாக அவர்களை மீட்புக் குழுவினர் விரைந்து சென்று அவர்களை  மீட்டனர்.

மீட்கப்பட்ட ராணுவ வீரர்கள் ஐந்து பேரின் உடல்நிலை சரி இல்லாததால் அவர்கள் உடனடியாக ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

Advertisement

அங்கே அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவர்கள் சிகிச்சை பலன் இல்லாமல் மரணம் அடைந்தனர்.

இவர்களோடு சேர்த்து காஷ்மீரில் பனிச்சரிவுக்கு பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 19 ஆக உயந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.