முகப்பு
இந்தியா

பிரதமர் மோடியுடன் அமரீந்தர் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மாநிலத்தில்

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மாநிலத்தில் தொழில் துறையை மேம்படுத்தவும், வேளாண் நெருக்கடியைச் சமாளிக்கவும் ஆதரவு அளிக்குமாறு வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியை அமரீந்தர் சிங் தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
பஞ்சாபில் வேளாண் நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதுடன், வேலைவாய்ப்பை உருவாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்த தொழில்துறை வளர்ச்சிக்கும் ஆதரவளிக்குமாறு பிரதமர் மோடியிடம் அமரீந்தர் வலியுறுத்தினார்.
பஞ்சாப்புக்கு ரூ.31ஆயிரம் கோடி கடன் உள்ளது. அப்பிரச்னையை தாங்கள் தலையிட்டு தீர்க்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
மேலும், மாநிலத்துக்கு பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாகவும், பஞ்சாப் காவல் துறையுடன் மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் விசாரணை அமைப்புகளும் இணைந்து அதை முறியடிக்க அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் அமரீந்தர் வலியுறுத்தினார்.

முழு கட்டுரையைப் படிக்க →