மெட்ரோ ரயில் திட்டங்களில் ஹிந்தி திணிப்புக் கூடாது: மத்திய அரசுக்கு சித்தராமையா கடிதம்
பெங்களூர்: கர்நாடகாவில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும் பெயர்ப் பலகையில் ஹிந்தி வார்த்தைகளை நீக்கிவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூர்: கர்நாடகாவில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும் பெயர்ப் பலகையில் ஹிந்தி வார்த்தைகளை நீக்கிவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையம் உட்பட பல பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் பெயர் பலகைகளில் இந்தி வார்த்தை இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், முதல்வர் சித்தராமையா, மத்திய அரசுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில், மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் பெயர் பலகைகளில் ஹிந்தி இடம்பெறுவது கன்னட மக்களின் உரிமையை பறிக்கும் செய்ல். கர்நாடகாவில் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் பெயர்கள் இருப்பதே போதுமானது. எனவே, ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களைக் கருத்தில் கொண்டு ஹிந்தி வார்த்தைகளை அகற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், உள்ளூர் மக்களுக்கு கன்னடமும், வெளியூர் மக்களுக்கு ஆங்கிலமும் போதும் என்பதால், ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம், ஹிந்தி இல்லாத பெயர் பலகைகளை தாற்காலிகமாக தயாரித்து பயன்படுத்துமாறு மாநில அரசு உத்தரவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.