முகப்பு
இந்தியா

ஜாதி, மதவாதத்தை ஒழிப்போம்: மோடி

ஜாதியவாதம், மதவாதம், வறுமை, ஊழல், பயங்கரவாதம் ஆகிய தீமைகளை 2022}ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டுமென்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:

ஜாதியவாதம், மதவாதம், வறுமை, ஊழல், பயங்கரவாதம் ஆகிய தீமைகளை 2022}ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டுமென்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
"மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை 30 நிமிடம் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:
ஒழிக்க வேண்டிய தீமைகள்: கடந்த 1942 ஆகஸ்ட் 9}இல் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். அடுத்த 5 ஆண்டுகளில் நமது நாடு சுதந்திரமடைந்தது. அதேபோல நாம் இப்போது ஜாதியவாதம், மதவாதம், வறுமை, ஊழல், பயங்கரவாதம் ஆகிய தீமைகளை ஒழிக்க 5 ஆண்டு இயக்கத்தைத் தொடங்க வேண்டும். நான் மேலே கூறியுள்ள ஐந்து பெரும் தீமைகள்தான் இப்போது நாட்டைக் கெடுத்து வருகின்றன. நடப்பு 2017}ஆம் ஆண்டில் நாம் அவற்றுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கி 2022}ஆம் ஆண்டில் அந்த 5 தீமைகளையும் முழுமையாக ஒழிக்க உறுதியேற்க வேண்டும். அப்போது புதிய இந்தியா உருவாகும். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஏற்பட்ட அதே உத்வேகத்துடன் இப்போது நாட்டைச் சூழ்ந்துள்ள தீமைகளையும் ஒழிக்க மக்கள் களமிறங்க வேண்டும்.
மாற்ற முடியாதது எதுவுமில்லை: நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. பல அரசுகள் மாறி, மாறி வருகின்றன. ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை அளிப்பதன் மூலம்தான் நாட்டை வளர்ச்சிப் பாதையில் நடத்திச் செல்ல முடியும். வரும் சுதந்திர தினம் நாம் கொண்டாடும்போது நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்னைகளையும் அடுத்த 5 ஆண்டுகளில் ஒழிப்போம் என்று உறுதி எடுக்க வேண்டும். நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களும் ஒரே நோக்கத்தில் உறுதியுடன் செயல்பட்டால் மாற்ற முடியாதது என்று எதுவும் கிடையாது.
பொதுமக்களின் கருத்து வேண்டும்: எனது சுதந்திர தின உரையில் இடம் பெற வேண்டிய விஷயங்கள் குறித்து நாட்டு மக்களிடம் இருந்து கருத்துகளை நான் எதிர்பார்க்கிறேன். கடந்த ஆண்டு எனது சுதந்திர தின உரை மிக நீண்டதாக இருந்தது என்று புகார்கள் வந்தன. இந்த முறை சுருக்கமாகவும், கருத்துச் செறிவுடனும் உரையாற்ற முயற்சிக்க இருக்கிறேன். 40 முதல் 50 நிமிடங்கள் வரை எனது உரை அமையும். இது எனக்கு நானே அமைத்துக் கொண்ட விதிமுறை. எனினும், அதனைக் கடைப்பிடிக்க முடியுமா? என்பது தெரியவில்லை.
ஏழைகளிடம் பொருள் வாங்குங்கள்: அடுத்து ரக்ஷா பந்தன், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி என பண்டிகைகள் தொடந்து வர இருக்கின்றன. இந்த பண்டிகைகளுக்கான பொருள்களை வாங்கும்போது ஏழை, எளிய, சிறு தொழிலாளர்கள் தயாரித்த பொருள்களை வாங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலை மேம்பட அனைவரும் உதவ முடியும். உதாரணமாக தீபாவளிக்கு சுற்றுச்சூழலைப் பாதிக்காத களிமண்ணால் தயாரிக்கப்படும் அகல் விளக்குகளைஅதிகம் வாங்கலாம். இதன் மூலம் பல ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும்.
ஜிஎஸ்டி}யால் மாற்றம்: சரக்கு}சேவை வரியால் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு மிகச் சிறந்த உதாரணம். ஜிஎஸ்டி வரிவிதிப்பை முடிவு செய்ததில் மாநில அரசுகளுக்கு முக்கியப் பங்கு அளிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் ஒருமித்த கருத்துடன் அனைத்து முடிவுகளையும் எடுத்துள்ளன.
ஒரே நாடு, ஒரே வரி என்ற மிகப்பெரிய கனவு நடைமுறைக்கு வந்துவிட்டது. ஜிஎஸ்டி புதிய வரி விதிப்பு முறை மட்டுமல்ல புதிய கலாசாரமும் கூட. ஏழைகள் பயன்படுத்தும் பல பொருள்களின் விலை ஜிஎஸ்டி}க்குப் பிறகு குறைந்துவிட்டதாக எனக்கு ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து சிலர் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில், "முதலில் ஜிஎஸ்டி குறித்து எங்களுக்கும் பயம் இருந்தது. ஆனால் அது அமல்படுத்தப்பட்ட பிறகு அதனைப் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டோம். ஜிஎஸ்டி மிகவும் எளிமையானது, தொழில் செய்வதை எளிதாக்குகிறது' என்று குறிப்பிட்டுள்ளனர்.
முழுவீச்சில் வெள்ள நிவாரணம்: அஸ்ஸாம், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மழை, வெள்ளத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு முழுவீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவம், விமானப் படையினர், துணை ராணுவப் படையினர் வெள்ளப் பகுதிகளில் சிறப்பாகக் கடமையாற்றி வருகின்றனர்.
வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளையும், உடனுக்குடன் மத்திய அரசு அளித்து வருகிறது.
உடனடி பயிர்க் காப்பீடு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக அளிக்க வேண்டுமென்று பயிர்க் காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர்கள் சென்று பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நாம் அனைவருமே முன்வர வேண்டும். வெள்ள பாதிப்புகள் குறித்து 24 மணி நேரமும் தகவல்களை அளிக்க கட்டுப்பாட்டு அறையும், 1078 என்ற தொலைபேசி உதவி எண்ணும் உருவாக்கப்பட்டுள்ளது என்று மோடி பேசினார்.
ஏற்கெனவே குஜராத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட மோடி, அடுத்ததாக புதன்கிழமை அஸ்ஸாமுக்கு செல்ல
விருக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →