முகப்பு
இந்தியா

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் ராஜிநாமா!

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த், தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்தார்.

Updated On : 20 ஜூன், 2017 at 3:18 PM
பகிர்:

புதுதில்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த், தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்தார்.

ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதாவின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பவர் பிகார் கவர்னரான ராம்நாத் கோவிந்த். இவர் இதற்கு முன்பாக பாஜக செய்தித் தொடர்பாளராகவும், அக்கட்சி  சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.

தற்பொழுது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதைத்  தொடர்ந்து, அவர் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமாவை தற்பொழுதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.

Advertisement

மேற்கு வங்க ஆளுநராக உள்ள கேசரி நாத் திரிபாதி, பிகார் ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.