முகப்பு
இந்தியா

வீடு வாங்குவோருக்கு கட்டுமான நிறுவனம் நெருக்கடி தரக் கூடாது: வெங்கய்ய நாயுடு

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பைக் காரணம் காட்டி, தவணை முறையில் வீடு வாங்குவோருக்கு கட்டுமான நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:48 PM
பகிர்:

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பைக் காரணம் காட்டி, தவணை முறையில் வீடு வாங்குவோருக்கு கட்டுமான நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
இதுதொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அவர் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி விதிப்பு முறை, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், வீடு வாங்குவதற்கு முன்பதிவு செய்து, பாதிப் பணத்தை செலுத்தியவர்களிடம், ஜூலை 1-க்குள் முழுத் தொகையையும் செலுத்துமாறு கட்டுமான நிறுவனங்கள் நெருக்கடி கொடுப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. இல்லாவிட்டால், கூடுதல் வரியைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கட்டுமான நிறுவனங்கள் கூறுவதாகப் புகார்கள் கிடைத்துள்ளன.
வீடு வாங்குவோருக்கு கட்டுமான நிறுவனங்கள் நெருக்கடி கொடுப்பது, ஜிஎஸ்டி சட்டத்துக்கு எதிரானதாகும்.
தற்போதைய வரி விதிப்பை ஒப்பிடுகையில், ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு கட்டுமானத் துறையில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது என்று வருவாய்த் துறை ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்த பிறகு, வரிச் சலுகைகளை வீடு வாங்குவோருக்கு கட்டுமான நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.
எனவே, வீடு வாங்குவோரிடம் இருந்து எந்தவொரு கட்டுமான நிறுவனமும் கூடுதல் வரியை வசூலிக்கவில்லை என்பதை கட்டுமான நிறுவனச் சங்கங்களும், அனைத்து மாநில முதல்வர்களும் உறுதிசெய்ய வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →