குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி வியாழக்கிழமை (ஜூன் 29) அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்தியாகுடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி வியாழக்கிழமை (ஜூன் 29) அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி வியாழக்கிழமை (ஜூன் 29) அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தற்போது குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்துவரும் ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10}ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
குடியரசு துணைத் தலைவரை மாநிலங்களவை உறுப்பினர்களும், மக்களவை உறுப்பினர்களும் தேர்வு செய்வர். இரண்டு அவைகளையும் சேர்த்து மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 790. எனினும், பல இடங்கள் காலியாக உள்ளன. இதனிடையே, கோவா மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூலை 21}ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அந்த ஆணையம் தெரிவித்தது.
கோவாவைச் சேர்ந்த மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் சாந்தாராம் நாயக்கின் பதவிக்காலம் ஜூலை 28}ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூலை 17}ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் சாந்தாராம் நாயக்கால் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.